மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே சமரச பேச்சு நடத்த தயார் : நிதின் கட்கரி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக  சிவசேனா இடையே சமரச பேச்சு நடத்த தயார் : நிதின் கட்கரி

மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே சமரச பேச்சு நடத்த தயார் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மகாராஷ்டிராவின் 13வது சட்டப்பேரவையின் பதிவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது. அரசியலைப்பு சட்டப்படி, சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆனால் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் பனிப்போரால் மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் உருவாகியுள்ளது. ஆட்சியமைப்பதற்கான கெடு முடிவடைய இன்னும் சில மணி நேரமே எஞ்சி இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. சிவசேனாவை அமைதிப்படுத்த தூதுவர் ஒருவரை பாஜக அனுப்பிய நிலையில், நிதின் கட்கரி உத்தவ் தாக்கரே-வை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், சிவசேனாவின் ஆதரவு இல்லாமலேயே தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் சிறுபான்மை அரசாக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை பாஜ செய்து வருகிறது. அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயற்சித்த சிவசேனாவின் கனவு நிறைவாகவில்லை. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று முன் தினம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் சரத் பவார்,  மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்த்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும். இதுதான் ஒரே வழி. எதிர்க்கட்சியாக  நாங்கள் பங்குவகிப்போம். ஜனாதிபதி ஆட்சியை தவிர்ப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து, சிவசேனா எம்எல்ஏ-க்களை குதிரை விலைக்கு பணம் கொடுத்து வாங்க முயல்வதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், மேற்கு பாந்தராவில் உள்ள ரங்கசாரதா நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்எல்ஏக்களை அக்கட்சியின் இளம்தலைவர் ஆதித்ய தாக்கரே நேற்று சந்தித்து பேசினார். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இன்று அதிகாலை அவர் கிளம்பி சென்றார். இதனிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே-வை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி இன்று சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி கூறியதாவது, \' மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக,சிவசேனை இடையே சமரச பேச்சு நடத்த தயார் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிவசேனை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் சிவசேனை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும் பாஜக மூத்தத் தலைவர் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே சமரச பேச்சு நடத்த தயார் என்று தெரிவித்துள்ளார். சிவசேனா எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சிவசேனை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை