கமல் எனது திரையுலக அண்ணன்: ரஜினி

தினமலர்  தினமலர்
கமல் எனது திரையுலக அண்ணன்: ரஜினி

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் மற்றும் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், எனது கலை உலக அண்ணன் கமல்ஹாசன். நேற்றும், இன்றும் அவருக்கு மறக்க முடியாத நாள். நேற்று அவருடைய தந்தைக்கு சிலை திறந்து வைத்தார். இன்றைக்கு அவரின் புது அலுவலகம், கலையுலக தந்தை கே.பாலசந்தரின் சிலையை திறந்து வைத்தார். கே.பாலசந்தர் கமலுக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கும் தந்தை, பிதமாகன், குருவாக இருந்தவர்.

கமலுக்கு அரசியலுக்கு வந்தாலும் தாய்வீடான சினிமாவை விட மாட்டார். கலையை உயிராக கொண்டிருப்பவர். தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே ‛விக்ரம்' படத்தை எப்படி இயக்கினார் என வியந்தேன். ‛தேவர் மகன்' படம் சினிமாவின் காவியம். அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்தவிட்டு அன்றைக்கு இரவே கமலின் வீட்டிற்கு சென்று பாராட்டினேன்.

நான் அதிகமுறை பார்த்த படங்கள் ‛காட்பாதர், திருவிளையாடல் ஹேராம்'. அதிலும் ஹே ராம் படத்தை 30 - 40 முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு விதமான அனுபவம் தந்தது.

பாலசந்தரின் சிலையை திறந்து வைத்தபோது அவருடன் பழகிய நாட்கள் வந்து சென்றன. தமிழ் மட்டும் கற்றுக்கொள், உன்னை எங்க கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பார் என பாலசந்தர் சொன்னது, தமிழ்நாட்டு மக்களை அப்படி சொல்வதாக எண்ணினேன். இவருக்கு பிடித்த குழந்தை என்று சொல்ல மாட்டேன் கலைஞன் கமல்ஹாசன். அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து கொண்டே இருப்பார். கமலுக்கு மற்றுமொரு தகப்பன் அவர்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

மூலக்கதை