தமிழில் நடிகராக அறிமுகமாகும் கன்னட இயக்குனர்

தினமலர்  தினமலர்
தமிழில் நடிகராக அறிமுகமாகும் கன்னட இயக்குனர்

வளர்ந்து வரும் இளம் கன்னட இயக்குனர் நாகஷேகர். ‛அரண்மனை' திரைப்படத்தின் மூலம் இயக்குனரான இவர், அதனைத் தொடர்ந்து 'சஞ்சு வெட்ஸ் கீதா', மைனா படங்களை இயக்கினார். அம்பரீஷ் - சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை 'அமர்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழுக்கு இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக வருகிறார்.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம் தயாரிக்கும் திரைப்படம் 'நவம்பர் மழையில் நானும் அவளும்'. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. நாகஷேகரின் கன்னடப் படமான 'மைனா', மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் 'முதல் மழை' என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

மூலக்கதை