அமலாபாலின் புதிய காதலர் இவர் தானா?

தினமலர்  தினமலர்
அமலாபாலின் புதிய காதலர் இவர் தானா?

சென்னை: நடிகை அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குநர் விஜய்யுடனான திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு மீ்ண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் அமலாபால். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்படம் தொடர்பான பேட்டிகளில் தனது ஆண் நண்பர் பற்றி அவர் பேசியிருந்தார். அவருடன் புதுச்சேரியில் தங்கி இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். அவர் தந்த தைரியம் மற்றும் தெளிவின் மூலமே ஆடை படத்தில் தான் துணிந்து நடித்ததாக அமலாபால் கூறியிருந்தார். ஆனால் தனது காதலர் யார் என்பது பற்றி அவர் மேலும் அவர் கூற மறுத்து விட்டார். இதனால் அமலாபாலின் காதலரைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் இருக்கும் அப்புகைப்படத்தில் அமலாபாலின் அருகே அவர் நின்று கொண்டிருக்கிறார்.

அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், இமயமலைப் பயணம் மற்றும் திருவண்ணாமலை பயணம் போன்றவற்றிலும் அவர் உடன் இருந்திருக்கிறார். இதனால் அவர் தான் அமலாபாலின் காதலர் என நெட்டிசன்கள் அப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையிலேயே அவர் தான் தனது ஆண் நண்பரா என்பதை அமலாபாலே கூறினால் தான் உண்மை தெரிய வரும்.

மூலக்கதை