மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண் விஜய்

தினமலர்  தினமலர்
மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண் விஜய்

‛குற்றம் 23' படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீசாக நடிக்கும் படம் சினம். இதனை ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்குகிறார். மூவி லைட் லைட் இந்த நிறுவனம் நிறுவனம் தயாரிக்கிறது. பல்லக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, காளிவெங்கட் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சபீர் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி அருண் விஜய் கூறியதாவது: இந்த படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும். பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன் என்றார்.

மூலக்கதை