எனது உடலில் பல துளைகள் போடப்பட்டுள்ளன: அமிதாப் உருக்கம்

தினமலர்  தினமலர்
எனது உடலில் பல துளைகள் போடப்பட்டுள்ளன: அமிதாப் உருக்கம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் சினிமா வாழ்க்கை 50 வயதை எட்டி உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அமிதாப், முதுமை தந்த உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது உடல் நிலை குறித்து அவர் சமூகவலைதளத்தில் உருக்கமாக எழுதியிருப்பதாவது:

எனது உடலில் பல துளைகள் போடப்பட்டுள்ளது. தற்போது சோனா கிராபியும் எடுக்கப்படுகிறது. பல ஊசிகள் உடலின் பக்கவாட்டில் குத்தப்பட்டுள்ளது. அதன் வழியாக மருந்துகள் ஏற்றப்படுகிறது. இனி வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்டெத்தஸ் கோப் அணிந்து சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கும் தேவதூதர்கள் (டாக்டர்கள்) கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

இவ்வாறு அமிதாப் எழுதியிருக்கிறார்.

மூலக்கதை