பெட்ரோல் ,டீசல் விலை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பெட்ரோல் ,டீசல் விலை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை இன்று (நவ.,08) அதன் விலையில் 10 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.55 காசுகள், டீசல் விலையில் 9 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.



விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.55 ஆகவும், டீசல்,விலையில் 9 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை