'சாட்சியை மிரட்டினார் கமல்நாத் உறவினர்'

தினமலர்  தினமலர்
சாட்சியை மிரட்டினார் கமல்நாத் உறவினர்

புதுடில்லி: 'வி.வி.ஐ.பி.,களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர்ரதுல் பூரி, சாட்சியை மிரட்டினார்' என, குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

முந்தைய காங்., ஆட்சியின்போது, வி.வி.ஐ.பி., களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில், 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், காங்.,கைச் சேர்ந்த, ம.பி., முதல்வர் கமல்நாத்தின் மருமகன் தொழிலதிபர், ரதுல் பூரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த வழக்கில், அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:இந்த வழக்கில் 'அப்ரூவர்' ஆக, மாறிய ராஜிவ் சக்சேனாவிடம், விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, 'தன்னுடைய தந்தையும், தொழிலதிபருமான தீபக் பூரி மற்றும் தன் உறவினர் குறித்த தகவல்களை அளிக்கக் கூடாது' என, ரதுல் பூரி மிரட்டியதாக, சக்சேனா கூறியுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மூலக்கதை