கிரிக்கெட் சூதாட்டம்: கர்நாடக வீரர்கள் கைது | நவம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
கிரிக்கெட் சூதாட்டம்: கர்நாடக வீரர்கள் கைது | நவம்பர் 07, 2019

பெங்களூரு: கர்நாடகா பிரிமியர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெல்லாரி அணி கேப்டன் சி.எம்.கவுதம், அப்ரர் காஜி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ நடத்தப்படுகிறது. இத்தொடரில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. பெங்களூரு அணி வீரர் நிஷாந்த் சிங், பெலகவி அணி உரிமையாளர் அஸ்வக் அலிதார் உட்பட இதுவரை 4 பேர் கைதாகினர்.

இத்தொடரின் கடந்த சீசன் பைனலில், ஹுப்ளி அணி 8 ரன்னில் பெல்லாரி டஸ்கர்சை வீழ்த்தியது. இப்போட்டியில் ‘சேஸ்’ செய்த போது, பெல்லாரி அணி கேப்டன், கீப்பர் சி.எம்.கவுதம், அப்ரர் காஜி என இருவரும் மந்தமாக பேட்டிங் செய்ய ரூ. 20 லட்சம் பெற்றது தெரியவந்தது. இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சூதாட்ட வழக்கை விசாரிக்கும் துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறுகையில்,‘‘ கே.பி.எல்., தொடரில் சி.எம்.கவுதம், அப்ரர் காஜி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது,’’ என்றார்.

சீனியர் வீரர்

பெங்களூருவை சேர்ந்த கவுதம், ஐ.பி.எல்., தொடரில் டில்லி, மும்பை, பெங்களூரு அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது கோவா அணி சார்பில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கிறார். அப்ரர் தற்போது மிசோரம் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2011ல் பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் ஒரு போட்டியில் பங்கேற்றார்.

 

மூலக்கதை