4 பந்தில், 4 விக்கெட்: ரோஸ் மேரி கலக்கல் | நவம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
4 பந்தில், 4 விக்கெட்: ரோஸ் மேரி கலக்கல் | நவம்பர் 07, 2019

வாங்கனுய்: நியூசிலாந்து உள்ளூர் போட்டியில் இன்டிகோ வீராங்கனை ரோஸ்மேரி மயர், 4 பந்தில் 4 விக்கெட் சாய்த்து அசத்தினார்.

நியூசிலாந்தில் பெண்களுக்கான ‘ஸ்ரீம்ப்டன்’ டிராபி உள்ளூர் கிரிக்கெட் தொடர் (40 ஓவர்) நடக்கிறது. இன்டிகோ, டரனாகி அணிகள் மோதிய போட்டி வாங்கனுய் நகரில் நடந்தது. முதலில் களமிறங்கிய இன்டிகோ அணி 40 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்தது. மார்கெட் 55, ரோஸ்மேரி மயர் 33 ரன்கள் எடுத்தனர்.

பின் களமிறங்கிய டரனாகி அணியின் ‘டாப் ஆர்டரை’ ரோஸ்மேரி காலி செய்தார். தனது இரண்டாவது ஓவரின் முதல் 4 பந்தில் 4 பேரை அவுட்டாக்கி, ‘டபுள் ஹாட்ரிக்’ (தொடர்ந்து நான்கு விக்கெட் வீழ்த்துவது) விக்கெட் வீழ்த்தி கலக்கினார். டரனாகி அணி 18.2 ஓவரில் 56 ரன்னுக்கு சுருண்டது. இன்டிகோ அணி 207 ரன்னில் வெற்றி பெற்றது. 4 ஓவர் வீசிய ரோஸ்மேரி, ஒரு ரன் கூட கொடுக்காமல் 4 விக்கெட் சாய்த்தார்.

 

மூலக்கதை