கோப்பை வென்றது இந்தியா * பெண்கள் அணி அபாரம் | நவம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இந்தியா * பெண்கள் அணி அபாரம் | நவம்பர் 07, 2019

ஆன்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் 6 விக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி, கோப்பை கைப்பற்றியது. 

ஐ.சி.சி., பெண்கள் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, விண்டீஸ் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலையில் இருந்தது. 

மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. மாத்யூஸ், மெக்லீன் (3) ஜோடி துவக்கத்தில் ஏமாற்ற கேம்பெல்லே (7) கைவிட்டார். மாத்யூஸ் (26), செடீன் (6), கைசோனா (16) சொதப்பினர். கேப்டன் ஸ்டெபானியே டெய்லர் அதிகபட்சம் 79 ரன் எடுத்தார். கிங் (30) சற்று உதவ, விண்டீஸ் அணி 50 ஓவரில் 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எளிய இலக்கு

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் எட்டினர். முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்த போது, ஜெமிமா (69) அவுட்டானார். ஸ்மிருதி 74 ரன்னுக்கு வீழ்ந்தார்.

பூனம் ராத் 24, கேப்டன் மிதாலி ராஜ் 20 ரன் எடுத்தனர். இந்திய அணி 42.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றியது. 

 

மூலக்கதை