உலக கோப்பை தகுதிப் போட்டிக்காக ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா நிறுத்தம்

தினகரன்  தினகரன்
உலக கோப்பை தகுதிப் போட்டிக்காக ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா நிறுத்தம்

மும்பை: உலக கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா பங்கேற்க உள்ளதால்  ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில்  12 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளது.இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் லீக் சுற்றுகள்  அக்.20ம் தேதி  தொடங்கியது. கடைசி லீக் போட்டி வரும் ஆண்டு பிப்.23ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்எல் ேபாட்டிகளில் 12 நாட்கள் இடைவெளி விடப்படுகிறது.காரணம் உலக கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்தியா  விளையாட உள்ளதுதான். இந்தியா அணி வீரர்கள் பலரும்  ஐஎஸ்எல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். அதனால் அவர்கள் இந்திய அணிக்காக விளையாட வசதியாக நவ.11ம் தேதி முதல் நவ.22ம் தேதி வரை 12நாட்கள் ஐஎஸ்எல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.உலக கோப்பை கால்பந்து போட்டி 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் பங்கேற்கும் ஆசிய நாடுகளை தேர்வு செய்வதற்கான  முதல் தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜூன் மாதம் தொடங்கியது. இந்த 2வது சுற்று தகுதிப் போட்டிகள்  செப்டம்பர் மாதம் தொடங்கியது.  இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும். இன்னும் 3, 4வது சுற்றுகளுக்கான தேதிகள் தகுதிப் பெறும் நாடுகளை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.இந்த சுற்றில் இந்தியா இடம் பெற்றுள்ள ஈ பிரிவில்  கத்தார், ஒமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் கத்தார், வங்கதேசம் அணிகளிடம் டிரா செய்துள்ளது. ஓமனிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது. இப்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே 3வது சுற்றில் விளையாட தகுதிப் பெறும்.ஐஎஸ்எல் இடைவெளியில் நவ.14ம் தேதி  ஆப்கானிஸ்தான் அணியுடன்  இந்தியா மோத உள்ளது. ஆப்கானிஸ்தானில் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி தீவிரவாத அச்சுறுத்தல் காரணாமாக தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும்.அடுத்து நவ.19ம் தேதி ஓமன் அணியுடன் மீண்டும் மோத உள்ளது.  எஞ்சிய 3 போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச், ஜூன் மாதங்களில் நடைபெறும்.

மூலக்கதை