கர்தார்பூர் பயணிக்கும் இந்தியர்களுக்கு 'பாஸ்போர்ட்' கட்டாயம்: பாக்., ராணுவம்

தினமலர்  தினமலர்
கர்தார்பூர் பயணிக்கும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் கட்டாயம்: பாக்., ராணுவம்

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் பாதை, நாளை திறக்கப்பட உள்ள நிலையில், 'இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம், 'பாஸ்போர்ட்' கொண்டு வர வேண்டும்' என, பாகிஸ்தான் ராணுவம் திடீரென அறிவித்து உள்ளது.

சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின், 550வது பிறந்த தினம், 12ம் தேதி கொண்டாடப்படஇருக்கிறது. குருநானக்கின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானில், சர்வதேச எல்லையை ஒட்டி, ராவி நதிக்கரையில் அமைந்து உள்ளது.

இந்த சமாதிக்கு செல்வதை, சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். குருநானக் சமாதிக்கு, சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக் நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை, மத்திய அரசு சிறப்பு பாதை அமைத்துள்ளது. நாளை திறப்புஅதேபோல், பாக்., எல்லையிலிருந்து, கர்தார்பூர் சாஹிப் வரை, பாகிஸ்தான் சிறப்பு பாதை அமைத்துள்ளது. இந்தப் பாதை, நாளை திறக்கப்பட உள்ளது.

'கர்தார்பூர் சாஹிப் செல்ல, இந்திய சீக்கியர் களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், கர்தார்பூருக்கு பயணிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில், இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கர்தார்பூர் செல்ல, இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையா என, பாகிஸ்தானிடம் இந்தியா விளக்கம் கேட்டிருந்தது.அனுமதிஇதற்கு, பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர், அசீப் கபார் கூறியதாவது:கர்தார்பூர் சிறப்பு பாதையில் பயணிக்க, இந்திய யாத்ரீகர்களுக்கு, கண்டிப்பாக பாஸ்போர்ட் தேவை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே, பாஸ்போர்ட் தேவை என, கூறியுள்ளோம்.

பாஸ்போர்ட் அடையாளத்தின் அடிப்படையிலேயே, கர்தார்பூர் வழித் தடத்தில் பயணம் செய்ய, இந்திய யாத்ரீகர்களை அனுமதிக்க முடியும். பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் இறையான்மை விஷயத்தில், சமரசம் செய்து கொள்ள முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை