புதிய பாலிசிகள் விற்பனை : ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தடை

தினமலர்  தினமலர்
புதிய பாலிசிகள் விற்பனை : ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தடை

புதுடில்லி:அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம், புதிய பாலிசிகள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, இர்டாய் தடை விதித்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிதி நிலை மோசமானதால், இர்டாய் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், இந்நிறுவனத்தில் உள்ள, அனைத்து பாலிசிதாரர்களின் சம்பந்தப்பட்ட நிதி விஷயங்கள் அனைத்தையும், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றுமாறும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை