உத்திரமேரூர் அருகே பரபரப்பு லாரி மோதி அரசு பஸ் நொறுங்கியது: சக்கரம் கழன்று ஓடியது; 15 பேர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்திரமேரூர் அருகே பரபரப்பு லாரி மோதி அரசு பஸ் நொறுங்கியது: சக்கரம் கழன்று ஓடியது; 15 பேர் காயம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே லாரி மோதியதில் அரசு பஸ் நொறுங்கியது. பஸ்சின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில், 15 பேர் காயம் அடைந்தனர். கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ் (தடம் எண் 148), நேற்று மாலை 6 மணிக்கு வந்தவாசிக்கு புறப்பட்டது.

சேகர், என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். கண்டக்டராக ஞானசேகர் பணியாற்றினார்.

பஸ்சில் 50 பேர் பயணித்தனர். உத்திரமேரூர்-செங்கல்பட்டு சாலை குமாரவாடி கூட் சாலையில் இரவு 8. 30 மணியளவில் அரசு பஸ் வந்தபோது, கல்குவாரியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் பஸ் மீது லாரி வேகமாக  மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறி துடித்தனர். ஓட்டுனர், கண்டக்டர் மற்றும் வந்தவாசி முகமது, புதூர் நாசர், வெங்குன்றம் விஜயா, மானாம்பதி மோகனா உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பஸ்சின்  டயர்கள் அப்படியே கழன்றது. தகவல் அறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவிசி தேடி  வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை