சென்ட்ரல்- கொல்லம் இடையே சுவீதா சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்ட்ரல் கொல்லம் இடையே சுவீதா சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்ட்ரல்- கொல்லம் இடையே சுவீதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரயில் 15, 22 ஆகிய தேதிகளில் இரவு 8. 30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

அதைப்போன்று கொல்லம்- சென்ட்ரல் இடையே நவம்பர் 17, 24, டிசம்பர் 1  ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7. 20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.   இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

.

மூலக்கதை