அயோத்தி வழக்கு தீர்ப்பு பற்றி சர்ச்சை கருத்து கூறக்கூடாது: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தி வழக்கு தீர்ப்பு பற்றி சர்ச்சை கருத்து கூறக்கூடாது: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி மத்திய அமைச்சர்கள் யாரும் தேவையில்லாமல் பேசக்கூடாது. சர்ச்சை கருத்தை வெளியிடக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரும் 17ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க உள்ளதால் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

10ம் தேதிக்கு பிறகு தமிழக போலீஸ் அதிகாரிகள் மற்றும்  போலீசார் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி அயோத்தி தீர்ப்பு பற்றி பேச மத்திய அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறார். அதில் ‘அயோத்தி நில வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

அதன் மீது மத்திய அமைச்சர்கள் யாரும்  தேவையற்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது. நாடு முழுவதும் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்.

இது ஒவ்வொருவரின் கடமையாகும்’ என தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ரேடியோவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2010ம் ஆண்டு அயோத்தி நில வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது அரசு, அரசியல் கட்சிகள், பொதுமக்கள் யாரும்  பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக அமைதி காத்தது குறித்து நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை