காரை சேர் ஆக்கி அமர்ந்த யானை: வைரல் வீடியோ

தினமலர்  தினமலர்
காரை சேர் ஆக்கி அமர்ந்த யானை: வைரல் வீடியோ

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் உள்ள காவோயாய் தேசிய பூங்காவில் சாலையில் சென்ற கார் மீது யானை ஏறி அமர முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அங்குள்ள தானாரத் சாலையில் சென்ற காரை, ஆண்யானை ஒன்று வழிமறித்தது. பின், அந்த காரின் மீது ஏற முயன்றது. சிறிது நேரத்தில் காரின் ஓட்டுனர் காரை இயக்கி தப்பினார். இதில், காரின் பின்பக்க கண்ணாடி, மேற்கூரை, நடுப்பகுதி பலத்த சேதமடைந்தன.

இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க யானைகளை கண்டதும் சுற்றுலாவாசிகள் 30 மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்துமாறு பூங்கா சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மூலக்கதை