துவக்க விழாவுக்கு ‘நோ’ * ஐ.பி.எல்., தொடரில்... | நவம்பர் 06, 2019

தினமலர்  தினமலர்
துவக்க விழாவுக்கு ‘நோ’ * ஐ.பி.எல்., தொடரில்... | நவம்பர் 06, 2019

மும்பை: இந்தியாவில் கடந்த 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளுக்கு முன், பிரமாண்ட முறையில் துவக்கவிழா நடத்தப்படும்.

ஷாருக்கான், கத்ரினா கைப் என பாலிவுட் நட்சத்திரங்களுடன், சர்வதேச ‘பாப்’ பாடகர்கள் கேட் பெர்ரி, அகான், பிட் புல் உள்ளிட்டோர் பங்கேற்பர். கடந்த 2019 தொடரின் துவக்க விழாவுக்கு மட்டும் ரூ. 30 கோடி செலவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படி அதிக பணத்தை விழுங்கும் துவக்க விழாவை ரத்து செய்வது என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘துவக்க விழா என்ற பெயரில் அதிகமான பணம் வீணடிக்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பங்கேற்பவர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறது,’’ என்றார்.

மூலக்கதை