வர்ணனை செய்வாரா தோனி | நவம்பர் 06, 2019

தினமலர்  தினமலர்
வர்ணனை செய்வாரா தோனி | நவம்பர் 06, 2019

புதுடில்லி: இந்தியா– வங்கதேசம் அணிகள் மோதவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில், முன்னாள் கேப்டன் தோனி வர்ணனை செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா–வங்கதேசம் அணிகள் மோதவுள்ள, கோல்கட்டா டெஸ்ட் (நவ. 22–26) பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. இந்திய மண்ணில் முதல் முறையாக நடக்கவுள்ள வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கான ஏற்பாடுகள், ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில், இந்திய முன்னாள் கேப்டன்கள் வர்ணனை செய்ய உள்ளனர். இவர்களின் மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். இதனால், தோனியின் குரலை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இதற்கிடையே, தோனி ‘மைக்’ பிடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ இந்தியா– வங்கதேச தொடரை ஔிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிறுவனத்திடம் இருந்து, முன்னாள் வீரர்களின் வர்ணனை பணி குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். தோனியை பொறுத்தவரை தற்போது வரை இந்திய அணியில் நீடிக்கிறார். இவர் ஓய்வு பெறவில்லை. இவரும் வர்ணனை செய்தால், ஆதாயம் தரும் இரட்டைப்பதவி புகார் எழுப்பப்படும் எனத்தெரிகிறது. இதன் அடிப்படையில் தோனி வர்ணனை செய்ய வாய்ப்பில்லை,’’ என்றார்.

............

மூலக்கதை