நாளை ராஜ்கோட்டில் 2வது டி20: மிரட்டும் புயலால் போட்டி நடக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை ராஜ்கோட்டில் 2வது டி20: மிரட்டும் புயலால் போட்டி நடக்குமா?

ராஜ்கோட்: கடந்த வாரம்  உருவான ‘மகா’ புயல் நகர்ந்து அரபிக் கடல் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த புயல், திடீரென திசை மாறி குஜராத்  கடற்கரையை நோக்கி திரும்பும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு அல்லது  நாளை (நவ.

7) காலையில் குஜராத்தில் கரையை கடக்கும் என்றும், இதனால் மணிக்கு 120 கி. மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது.



இதனால் இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்கு (நாளை இரவு ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க  மைதானம்) பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு பிரச்னையோடு நடந்த முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி  வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நாளை நடக்கவுள்ள உள்ள நிலையில், அந்த போட்டி பலத்த மழையால் பாதிக்கப்படலாம்  என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா கூறுைகயில், ‘‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து  வருகிறோம்.   மைதானத்தை முழுவதுமாக மூடி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி சரியான நேரத்தில் தொடங்குவதற்கு ஏதுவாக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை