துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் மானு பாக்கர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் மானு பாக்கர்

புஷவு: சீனாவின் புஷவுவில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244. 3 புள்ளிகள்  குவித்து இந்திய வீராங்கனை மானு பாக்கர் தங்கப் பதக்கம் வென்றார். இளம் வீராங்கனையான மானு பாக்கர், கடந்த மார்ச் மாதம் மியூனிக்கில்  நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டார்.

இதற்கிடையே, விவான் கபூர்,  மனிஷா கீர் ஆகியோர் அடங்கிய இந்திய ஜூனியர் டிராப் கலப்பு அணியும் தங்கப் பதக்கத்தை வென்றது.

முதல் நாள் போட்டி முடிவில் 2 தங்கம்  உள்பட 5 பதக்கங்களை வென்ற நிலையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

.

மூலக்கதை