டெல்லி காற்று மாசுக்கு அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ராவை கண்டித்த ரசிகர்கள்: ஏசியை நிறுத்து, சிகரெட் புகைப்பதை கைவிடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி காற்று மாசுக்கு அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ராவை கண்டித்த ரசிகர்கள்: ஏசியை நிறுத்து, சிகரெட் புகைப்பதை கைவிடு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் கண்டித்திருக் கின்றனர். நீங்கள் சிகரெட் புகைப்பதையும், ஏசி பயன்படுத்துவதையும் முதலில் நிறுத்துங்கள் எனக் கூறி உள்ளனர்.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் தி ஒயிட் டைகர் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட படக்குழுவினர் முகத்தில் முகமூடி (மாஸ்க்) அணிந்து பணியாற்றுகின்றனர்.

மாஸ்க் அணிந்த தோற்றத்துடன் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா,’காற்றுமாசு நிரம்பி உள்ள டெல்லியில்  தி ஒயிட் டைகர் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக உள்ளது.

இத்தகைய சூழலில் தலைநகரில் மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது.

நமக்கெல்லாம் காற்றை சுத்தப்படுத்தும் ஏர்பியூரியர்ஸ், மாஸ்க் கிடைக்கிறது. ஆனால் வீடே இல்லாதவர்கள்.

மாஸ்க் கூட வாங்க முடியாதவர்களின் நிலை என்ன?. காற்று மாசுவை குறைக்க முயற்சிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும்’ என அட்வைஸ் செய்திருந்தார்.
பிரியங்காவின் பதிவுக்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் கண்டனம் எழுந்துள்ளது.

முதலில் நீங்கள் சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள்.

ஏசி பயன்படுத்துவது, கார் பயன்பாடு போன்றவைகூட காற்று மாசுவுக்கு காரணம் முதலில் அதை நீங்கள் சரிசெய்துகொள்ளுங்கள் என கூறி உள்ளனர்.

.

மூலக்கதை