ரூ.1 கோடி வங்கி பணம் கொண்டு சென்றவாகனம் கவிழ்ந்து 4 பேர் பலி: நகர் பகுதியில் சோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு

நகர்: நகர் பகுதியில் ரூ. 1 கோடி வங்கிப் பணம் கொண்டு சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில், 4 பேர் பலியாகினர்.

காஷ்மீரில் ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று கத்துவா பகுதியில் இருந்து பானி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த  வாகனத்தில் வங்கிக்கு சொந்தமான ரூ.

1 கோடி பணம் கொண்டு செல்லப்பட்டது. விக்ரம் சிங் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தார்.

இரண்டு  பாதுகாவலர்கள் மற்றும் ஒரு வங்கி கணக்காளர் ஆகியோர் வாகனத்தில் இருந்தனர்.

இந்நிலையில், வாகனம் கர்டூ மோர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு குறுகிய வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  அருகில் இருந்த 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயெ பலியாகினர்.   மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும், வாகனத்தில் இருந்த ரூ.

1 கோடி பணம் பத்திரமாக மீட்கப்பட்டு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.

.

மூலக்கதை