விளையாட்டுக்கு இடையே அன்பு: ரோஹித் மகளிடம் கொஞ்சிய தவான்...வீடியோவை பார்த்து பலரும் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விளையாட்டுக்கு இடையே அன்பு: ரோஹித் மகளிடம் கொஞ்சிய தவான்...வீடியோவை பார்த்து பலரும் பாராட்டு

புதுடெல்லி: இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷிகார் தவான் ஜோடிதான். சச்சின்  டெண்டல்கர் - சவுரவ் கங்குலி ஜோடிக்கு பின் சிறந்ந வலது, இடதுகை பேட்ஸ்மேன் ஜோடியாக  ரோஹித் சர்மா - ஷிகார் தவான் உள்ளனர்.   கிரிக்கெட் போட்டிகளை தாண்டியும் இருவரும் நல்ல நண்பர்கள்.

இந்நிலையில், தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மா மகளுடன்  விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ரோஹித் மகள், தவானை தலையில் தட்டுகிறார்.

உடனே தவான் வலிப்பது போல் படுக்கையில் விழுந்து எழுகிறார். மீண்டும்  அவரை தட்ட தவானும் மீண்டும் அதேபோன்று விழுவது போல் விளையாடுகிறார்.

தவான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து  வருகின்றனர். வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தவான் 41 ரன்கள் அதிகபட்சமாக அடித்தார்.

இப்போட்டியில் ரோஹித் சர்மா 9  ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை