ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஹாசிம் ஆம்லா ‘ரீஎன்ட்ரி’: டி10 கர்நாடகா அணிக்கு கேப்டன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஹாசிம் ஆம்லா ‘ரீஎன்ட்ரி’: டி10 கர்நாடகா அணிக்கு கேப்டன்

பெங்களூரு: தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரராக வலம் வந்த ஹாசிம் ஆம்லா,  கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை  தொடருக்குப் பிறகு அனைத்து விதமான  கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போலவே, தென் ஆப்ரிக்கா நாட்டில் ஸான்சி சூப்பர் லிக் எனப்படும் டி20 தொடர்  நடைபெற்று வருகிறது.   இதில் பங்கேற்கும் கேப் டவுன் பிளிட்ஸ் அணி கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்தது.

இந்த அணியின் புதிய ஆலோசகராக தென் ஆப்ரிக்க  அணியின் முன்னாள் அதிரடி வீரரான ஹாசிம் ஆம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இந்தாண்டு துபாயில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் தொடரின்  கர்நாடகா டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், இம்மாதம் 25ம் தேதிக்குப் பின்னரே அவர் கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்குத்  திரும்ப முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து கேப் டவுன் அணியின் தலைமை பயிற்சியாளர் கூறுகையில், ‘‘ஆம்லா இந்த விளையாட்டில் நீண்ட தூரம் பயணித்தவர்.

அதனால், எங்கள்  அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயமாக நாங்கள் கருதுகிறோம்’’ என்றார்.

.

மூலக்கதை