3 தங்கம் வென்றும் பாராட்டவில்லை பிரதமர், முதல்வர் மீது வருத்தம்: தமிழக ராணுவ வீரர் ஆதங்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
3 தங்கம் வென்றும் பாராட்டவில்லை பிரதமர், முதல்வர் மீது வருத்தம்: தமிழக ராணுவ வீரர் ஆதங்கம்

சென்னை: சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகளப் போட்டிகள் கடந்த அக். 17ம் தேதி முதல் 27ம்  தேதி வரை நடைபெற்றது.

இதில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் பங்கேற்று 100 மீ, 200 மீ, 400  மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்காக மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இவர், தனது சொந்த ஊரான  கும்பகோணத்துக்கு வந்தபோது அவருக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.அப்போது, ஆனந்தன் கூறுகையில், ‘‘சீனாவில் மாற்றுத்திறனாளி  ராணுவ வீரர்களுக்கான உலக அளவிலான தடகளப் போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் பெற்றுள்ளேன். பாரா பிரிவு ராணுவ வீரர்களுக்கான  தடகள போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் முதன் முறையாக நான்தான் பெற்றுள்ளேன்.

இதனால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளேன். உலக  அளவில் வெற்றி பெற்றாலும், இந்திய பிரதமர், தமிழக முதல்வர் பாராட்டுக்காக காத்திருக்கின்றேன்.

இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை.

2020ம்  ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் என்னுடைய அடுத்த இலக்கு’’ என்றார்.

.

மூலக்கதை