டேவிஸ் கோப்பை நடத்துவதில் தொடரும் சிக்கல் பொதுவான இடத்தை தேர்வு பண்ணுங்க: பாகிஸ்தானுக்கு ஐ.டி.எஃப் கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டேவிஸ் கோப்பை நடத்துவதில் தொடரும் சிக்கல் பொதுவான இடத்தை தேர்வு பண்ணுங்க: பாகிஸ்தானுக்கு ஐ.டி.எஃப் கடிதம்

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கடந்த செப். 14 மற்றும் 15ம் தேதிகளில், இந்திய அணி பாகிஸ்தான் சென்று அந்நாட்டின் தலைநகர்  இஸ்லாமாபாத்தில் விளையாட திட்டமிடப்பட்டது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான நிலை நீடிப்பதால்  கிரிக்கெட் உள்பட எந்த விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் உள்ளன. அதனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட டென்னிஸ் தொடரும் குறிப்பிட்ட  ேததியில் நடைபெறவில்லை.

ஆனால், டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்திய வீரர்கள் பங்கேற்பது குறித்து எதிர்பார்ப்புகள் இருந்தது.   கடந்த 1964ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தது.

 லாகூரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 4-0 என்ற  கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் பாதுகாப்பு ஆலோசகர்களின்  ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.

அப்ேபாது, ‘இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் டேவிஸ் கோப்பை போட்டியை,  பொதுவான நாட்டில் விளையாட வேண்டும்’ என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் தரப்பில் கருத்துகள் கூறப்பட்டன. அதன்தொடர்ச்சியாக போட்டி  வரும் 29, 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இதற்கிடையே, சர்வதேச ெடன்னிஸ் சங்கம் (ஐடிஎஃப்) தரப்பில் தற்போது ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘டேவிஸ் கோப்பை  விதிமுறைகளின்படி, பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு இப்போது ஒரு பொதுவான இடத்தை பரிந்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

மேலும்  அவர்களால் முன்மொழியப்பட்ட இடத்தை உறுதிப்படுத்த 5 வேலை நாட்கள் உள்ளன.

பாதுகாப்பு காரணங்களால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’  என்று தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை