சிறுமியையும், பெரிய நபரையும் காணவில்லை: நேரா வீட்டுக்கு வந்து பாருங்க...பாண்டியா பதிவுக்கு சாக்ஷி பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறுமியையும், பெரிய நபரையும் காணவில்லை: நேரா வீட்டுக்கு வந்து பாருங்க...பாண்டியா பதிவுக்கு சாக்ஷி பதிலடி

ராஞ்சி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தொடரிலிருந்து  முழுவதும் விலகினார். காயம் காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய பாண்டியா தற்போது  ஓய்வில் உள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பாண்டியா இன்ஸ்டாகிராமில் தோனி மற்றும் அவரது மகள் ஷிவா உடன் இருக்கும் புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். மேலும் ‘இந்த சிறுமியையும் அவருடன்  உள்ள இந்த பெரிய நபரையும் (தோனி) காணவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக்  பாண்டியாவின் இந்த பதிவு சில மணி நேரங்களில் இணையத்தில் வைரலானது.

அதை தொடர்ந்து தோனி மனைவி சாக்ஷி, அந்த பதிவில் தனது  கமெண்டை பதிவு செய்து பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். அந்த கமெண்டில், ‘உங்களுக்கு ராஞ்சியிலும், ஒரு வீடு இருக்கிறது  என்று தெரியும்தானே’ என்று ஹர்திக் பாண்டியாவிற்கு நினைவுப்படுத்தி உள்ளார்.   மேலும், ‘இவர்களை பிரிந்து இருப்பது போன்று நினைத்தால் நீங்கள் நேரடியாக வீட்டிற்கு வரலாம்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.

பாண்டியாவின்  கிண்டலுக்கு, தோனி மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை