ஐ.எஸ்.எல். கால்பந்து ஜாம்ஷெட்பூர் - பெங்களூரு ஆட்டம் ‘டிரா’

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐ.எஸ்.எல். கால்பந்து ஜாம்ஷெட்பூர்  பெங்களூரு ஆட்டம் ‘டிரா’

ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், 6வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ. எஸ். எல். ) கால்பந்து தொடர் நேற்றிரவு நடைபெற்றது.   இப்போட்டியில், ஜாம்ஷெட்பூர் எப். சி. - பெங்களூரு எப். சி. இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) ‘டிரா’வில் முடிந்தது.

பெங்களூரு வீரர்கள்  இலக்கை நோக்கி அடித்த 9 ஷாட்டுகளை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பால் தடுத்து நிறுத்தி அபாரமாக ஆடினார். இன்னும் வெற்றிக்கணக்கை  தொடங்காத நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் ‘டிரா’ தான் கண்டுள்ளது.

போட்டியில் இன்றும், நாளையும்  ஓய்வு நாளாகும்.

வருகிற 6ம் தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் எப். சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

.

மூலக்கதை