டில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை

தினமலர்  தினமலர்
டில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை

புதுடில்லி: புதுடில்லியில் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் 40 லட்ச மக்களுக்கு நில உரிமை வழங்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்பிறகு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கூறியது, டில்லியில் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் 40 லட்ச மக்களுக்கு அதற்கான இட உரிமையை வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, இதையொட்டி நவ.18-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் இதுதொடர்பாக மசோதா பார்லி.யில் தாக்கல் செய்யப்படும் . நில உரிமை வழங்கிய பின்னர் அந்த காலனிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கான இடத்தில் கட்டுமானம் மேற்கொள்வது அல்லது இடத்தை விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடியிருப்புவாசிகள் குஷி


மத்திய அரசின் இந்த அறிவிப்கை அடுத்து காலனிகளில் குடியிருப்பவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.பல ஆண்டுகளாக எங்களின் கனவு இன்று நிறைவேறியுள்ளதாகவும், மத்திய அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினர்.


தேர்தலுக்காக


டில்லியில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இப்படி ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

மூலக்கதை