காரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை

தினமலர்  தினமலர்
காரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை

கோவை: ஹிந்து கடவுள்களை இழிவாக பேசிய, சிறுமுகை காரப்பன் மீது, போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததால், அவர் தலைமறைவானார்.

கோவை, பீளமேட்டில், 29ல், திராவிடர் இயக்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற, சிறுமுகை காரப்பன் என்பவர், ஹிந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து இழிவாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர், போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறுமுகை மற்றும் பீளமேடு காவல் நிலையங்களில், புகார் அளித்தனர்.


மத கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது ஆகிய பிரிவுகளில், பீளமேடு போலீசார், காரப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காரப்பன், தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய, தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீளமேடு போலீசார் கூறுகையில், 'தலைமறைவான காரப்பனை, விரைவில், கைது செய்வோம்' என்றனர்.


மூலக்கதை