நோட்டீஸ்!ஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை

தினமலர்  தினமலர்
நோட்டீஸ்!ஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை

சென்னை:'சென்னையில், 140 கட்டடங்கள் மோசமான நிலையில் இருப்பதால், அக்கட்டடங்களில் வசிக்க வேண்டாம்' என, உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி, 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், ஆயிரக்கணக்கான கட்டடங்கள், மிகவும் பழமை வாய்ந்த கட்டடங்களாக உள்ளன. மழையின் போது, கட்டட சுவர்கள் இடிந்து விழுந்து, வீட்டில் வசிப்போர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.இதனால், மோசமான கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய, பொறியாளர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டார். அதன்படி, மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
இதில், ஆபத்தான நிலையில், இடிந்து விழக்கூடிய வகையில், 140 கட்டடங்கள் இருப்பது, மாநகராட்சி ஆய்வில் தெரிய வந்தது. அந்த கட்டடங்களில் வசிக்க வேண்டாம் என, உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:கன மழையின்போது, உங்களது மோசமான கட்டடம் இடியும் அபாயம் உள்ளது. உயிர் இழப்பு ஏற்படாமல் இருக்க, வீட்டை காலி செய்யுங்கள். அதையும் மீறி வசித்து, விபரீதம் ஏற்பட்டால், இழப்புக்கு நீங்களே காரணம் ஆவீர்கள். உங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை