கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி

தினமலர்  தினமலர்
கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி

விருதுநகர் : விருதுநகரில் பள்ளி மாணவி கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுதல் என பல்வேறு செயல்களை செய்து காட்டி உலக சாதனை நிகழ்த்தினார்.

விருதுநகர் பி.எஸ்.சி., பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஹர்ஷநிவேதா. இவர் தனது கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுதல், எழுதுதல், படம் வரைதல், 26 விதமான ரூபிக் கயூப்களை தீர்வு செய்தல், யோகா உள்ளிட்டவற்றை 45 நிமிடங்களில் செய்து முடித்தார். இச்சாதனையை யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

இதன் நிறுவன தலைவர் பாபுகிருஷ்ணன், செயலாளர் செல்வம் முன்னிலையில் சாதனை நிகழ்த்தப்பட்டது. மாணவியை பி.எஸ்.சி., ஆங்கிலப்பள்ளி முதல்வர் சாந்தி, துணைத்தலைவர் ராஜசேகரன், பொருளாளர் சரவணாபிரகாசம், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாராட்டினர்.

மூலக்கதை