நீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்

தினமலர்  தினமலர்
நீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் அருப்புக்கோட்டை இரட்டையர்கள் நீரில் மிதந்த படி சாதனை படைத்தனர்.

அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் இரட்டையர் விஷாலினி 11, அஸ்வின் 11. இவர்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க கோரி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் 1 மணி நேரம் 12 நிமிடம் 23 வினாடி நீரில் மிதந்தபடி சாதனை செய்தனர். கலெக்டர் சிவஞானம் துவங்கி வைத்தார். யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள் உலக சாதனையாக அங்கீகரித்தது. எஸ்.பி.,ராஜராஜன் பதக்கம், சான்றுகள் வழங்கி கவுரவித்தார். இரட்டையர்களை பெற்றோர்கள் சந்திரமோகன், இந்துமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

மூலக்கதை