லண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
லண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகேயுள்ள கிரேஸ் பகுதியில் உள்ள தொழிற்பூங்காவில் கண்டெய்னர் ஒன்று நின்று கொண்டிருந்தது. பல்கேரியா நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு வந்த இந்த கண்டெய்னரை இங்கிலாந்தின்  எஸ்செக்ஸ் பகுதி போலீசார் அதிரடியாக நேற்று சோதனையிட்டனர். அப்போது அதில் ஒரு சிறுவன் உள்பட 39 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயது டிரைவரை கைது செய்து விசாரித்தனர். 39 பேரையும் அந்த டிரைவர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரணை  நடைபெற்றுவருகிறது. மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை