அமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்

தினமலர்  தினமலர்
அமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்

அமைதியை உலகில் நிலை நிறுத்துதல், நல்லுறவை வளர்ப்பது, ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், வறுமை, நோய், எழுத்தறிவின்மையை ஒழிப்பது போன்றவை ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பணிகளாக உள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், 1945 அக்., 24ல் ஐ.நா., சபை உருவாக்கப்பட்டது.உலகின் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நா., சபையின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக 1948 முதல் ஆண்டுதோறும் அக்., 24ல், ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் கொள்கைகள் மற்றும் பணிகளை விளக்குவதே நோக்கம்.எத்தனை நாடுகள் : ஐ.நா., சபை உருவாக்கப்பட்டபோது 51 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இன்று 193 நாடுகள் உள்ளன. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது. தற்போதைய தலைவராக அன்டோனியா கட்டார்ஸ் உள்ளார்.கிளை அமைப்புகள் : ஐ.நா., சபையின் கீழ் சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் சிறுவர்களை பராமரிக்கும் 'யுனிசெப்', அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மக்கள்தொகை நிதியம், கலாசாரத்தை பாதுகாக்கும் 'யுனெஸ்கோ', அமைதிப்படை, நீதி வழங்கும் சர்வதேச நீதிமன்றம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் போன்றவை முக்கியமானவை.
ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனாவுக்கு 'வீட்டோ' எனும் சிறப்பு அதிகாரம் உள்ளது. இதில் ஒரு நாடு எதிர்த்தாலும், தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது.ஐ.நா., சபையில் அரபி, ஆங்கிலம், பிரஞ்சு, சைனீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.ஐ.நா., அமைதிப்படையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.10 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.உலகில் அமைதி நிலவ பாடுபட்டதற்காக, 2001ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா., சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா.,வுக்கான வருமானம் உறுப்பு நாடுகள் மூலம் கிடைக்கிறது. 2017 கணக்கின்படி, அதிகபட்சமாக அமெரிக்கா ரூ. 70 ஆயிரம் கோடி வழங்கியது.


மூலக்கதை