பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்

தினமலர்  தினமலர்
பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்

பெய்ஜிங்: சீனாவில், பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்ட விமானத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சீனாவின் ஹார்பின் நகரில் இன்னும் முழுமை பெறாத விமானத்தை மிகப்பெரிய டிரக்கில் ஏற்றி சென்றுள்ளனர். அப்போது, மேம்பாலத்தின் அடியில் செல்லும்போது, விமானம் சிக்கிக்கொண்டது. இதனை மீட்க பல ஊழியர்கள் போராடினர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


மூலக்கதை