வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு

தினமலர்  தினமலர்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு

சென்னை,:பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் '10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும்' என ஆக. 31ல் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப். 1ல் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.அதன் தொடர்ச்சியாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இணைந்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பொதுத்துறை வங்கிகளை இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.தமிழகத்தில் 35 ஆயிரம் ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் மூன்று லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். வங்கி அதிகாரிகளும் தார்மிகஆதரவு அளித்துள்ளனர்.இதனால் சென்னையில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு லட்சம் காசோலைகளும் நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சம் காசோலைபரிவர்த்தனைகளும்பாதிக்கப்பட்டன.நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக உருவாக்கவே 10 வங்கிகள் இணைக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது; இது ஆபத்தானது. பெரிய வங்கியாக உருவாக்கி பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முயற்சிக்கின்றனர்.அந்த நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை எனில் வங்கியை மூட வேண்டிய நிலைஏற்படும்.எனவே இந்த இணைப்பு தேவை இல்லாதது. இதற்கு பதில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வராக்கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மூலக்கதை