தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,

தினமலர்  தினமலர்
தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,

டாக்கா: வங்கதேச பெண் எம்.பி., தமன்னா நுஸ்ரத், தேர்வில் தனக்கு பதிலாக வேறு பெண்ணை வைத்து தேர்வெழுதிய சம்பவத்தால், பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி எம்.பி.,யான தமன்னா, பங்களாதேஷ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., படித்து வந்தார். இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளில் அவருக்கு பதிலாக 8 பேரை போலியாக நியமித்து அவர்களை தேர்வெழுத வைத்ததாக புகார் எழுந்தது. இதனை அங்குள்ள தொலைக்காட்சி, தேர்வு அறையிலேயே சென்று ஆதாரத்துடன் படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னான் கூறியதாவது: தமன்னா ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதில் 4 செமஸ்டர்களில் மொத்தம் 13 தேர்வுகளில் ஒன்றில் கூட அவர் எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளன. இதனால் தமன்னாவை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர், எந்த தேர்வுகளுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார். இவ்வாறு மன்னான் கூறினார்.

மூலக்கதை