தமிழக தபால் நிலையங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதம் 30 பார்சல்: தபால் துறை அதிகாரிகள் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக தபால் நிலையங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதம் 30 பார்சல்: தபால் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் 30 பார்சல்கள் பாகிஸ்தானுக்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை ெதாடர்ந்து, பாகிஸ்தான் அரசாங்கம் தங்களது தபால் சேவையை இந்தியாவுடன் நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த செயல் சர்வதேச  விதிமுறைகளுக்கு முரணானது என்று மத்திய அரசு கண்டித்துள்ளது.   கடந்த ஆக. 27ம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் இருந்து எந்த தபால் போக்குவரத்தையும்  பாகிஸ்தான் ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ஆவணங்கள் பாகிஸ்தானுக்கு ெசல்கிறது.

இந்த தபால்கள் ஸ்பீட் போஸ்டில் செல்பவை. அவை பெரும்பாலும் மும்பை வழியாகவும், சாதாரண தபால்கள் டெல்லி வழியாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் அவை டெல்லி அல்லது மும்பையில் இருந்து சாலை மற்றும் விமான மார்க்கமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தபால்களில் முருங்கை விதை உள்பட பயிர்களின் விதைகள் அதிகமாக இருக்கும்.



மாதத்திற்கு ஐந்து பதிவு தபால்கள் செல்கின்றன. பல நாடுகளுக்கு தபால்கள் அனுப்பப்பட்டாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கு அஞ்சல் போக்குவரத்து மிகக் குறைவு.

பதிவு செய்யப்பட்ட தபால் மற்றும் ஸ்பீடு போஸ்ட் தவிர, ஏரோகிராம் மற்றும் சீலிடப்பட்ட தபால்கள் மூலமாகவும் தொடர்பு இருந்ததாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கான தபால்கள் டெல்லி வழியாக அனுப்பப்படுவதால் அவை உள்நாட்டு சேவைகளாக கருதப்படுகின்றன.

பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அஞ்சல்களின் எண்ணிக்கை எங்களிடம் இல்லை. தமிழகத்தில் இருந்து மாதம்தோறும் 30 பார்சல் தபால் செல்கின்றன.

தற்போது பாகிஸ்தான் தபால் சேவைகளை நிறுத்திய நிலையில், அந்த நாட்டுக்கு எந்த தபாலையும் பதிவு செய்ய வேண்டாம் என்று தபால் நிலையங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள எந்த தபால் நிலையத்திலிருந்தும் எந்தவொரு தபால்களும் இப்போது பாகிஸ்தானுக்கு பதிவு செய்யப்படவில்லை’ என்றனர்.

.

மூலக்கதை