தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது: பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்
தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. .ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் நியூயார்க்கில் ஐநா பொது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் பிரச்னையை எழுப்ப முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முயன்ற சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேசுகையில்; பாகிஸ்தான் அரசு தனது மண்ணில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மூலம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையில் ஆக்கப்பூர்மான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகும். இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல் அவசியம்.  என்றும் அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய் ஷே முகமது போன்ற தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதும் எல்லைத் தாண்டி தாக்குதல்களை நடத்துவதும்தான் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐநா.சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முறை அதிபர் டிரம்ப் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அமைதியை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு விவகாரக் குழு செய்தித் தொடர்பாளர் ஆலிஸ் ஜி வெலஸ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை