பயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை

தினமலர்  தினமலர்
பயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை

வாஷிங்டன் : பயங்கரவாதமும், பயங்கரவாதிகளும் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


பாகிஸ்தான் அரசு தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மூலம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையில் ஆக்கப்பூர்மான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல் அவசியம் எனவும் அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய் ஷே முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதும் எல்லைத் தாண்டி தாக்குதல்களை நடத்துவதும்தான் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக உள்ளது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அண்மையில் நடைபெற்ற ஐநா.சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முறை அதிபர் டிரம்ப் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அமைதியை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு விவகாரக் குழு செய்தித் தொடர்பாளர் ஆலிஸ் ஜி வெலஸ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை