கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்

தினமலர்  தினமலர்
கனடாவில் கிங் மேக்கர் ஆகிறார் இந்தியர்

ஓட்டாவா : கனடாவில் மீண்டும் ஆட்சியைப்பிடிக்க, இந்தியர் ஜக்மீத் சிங் கட்சியின் ஆதரவு, ட்ரூடோவுக்கு தேவைப்படுகிறது. இதற்கான முயற்சி நடந்து வருகிறது.


வட அமெரிக்க நாடான கனடாவில் பார்லி.,க்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம், 338 இடங்களுக்கு நடந்த தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, 157 இடங்களில் வென்றது. முக்கிய எதிர்க்கட்சியான பழைமைவாத கட்சி, 121 இடங்களில் வென்றது. பெரும்பான்மையை நிரூபிக்க, ட்ரூடோவுக்கு, மேலும், 13 பேரின் ஆதரவு தேவை.


இந்நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜக்மீத் சிங் தலைமையிலான, புதிய ஜனநாயகக் கட்சி, 24 இடங்களில் வென்றுள்ளது. அவருடைய ஆதரவைப் பெறுவதற்கான முயற்சி நடக்கிறது.

மூலக்கதை