இன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து?

தினமலர்  தினமலர்
இன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து?

புதுடில்லி,: மத்திய அரசுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான, கர்தார்பூர் சாலை திட்டம் தொடர்பான ஒப்பந்தம், இன்று கையெழுத்தாகாது என தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, 4 கி.மீ., நீளத்துக்கு சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன.



நீண்ட இழுபறிக்கு பின், இந்த பணிகள், சமீபத்தில் முடிவடைந்தன. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் இந்த சாலை திறந்து வைக்கப்படவுள்ளது.இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, இன்று ஒப்பந்தம் கையெழுத்தாவதாக இருந்தது. ஆனால், இந்த சாலை வழியாக, இந்தியாவிருந்து வரும் சீக்கிய பக்தர்களிடம், தலா, 1,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் போவதாக, பாக்., அரசு திடீரென அறிவித்தது.இதற்கு, மத்திய அரசும், சீக்கிய பக்தர்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தால், இரு நாடுகளுக்கும் இடையே, இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இதனால், ஒப்பந்தம் கையெழுத்தாவது, ஓரிரு நாட்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

மூலக்கதை