அமித்ஷா-ஜெகன் மோகன் சந்திப்பு

தினகரன்  தினகரன்
அமித்ஷாஜெகன் மோகன் சந்திப்பு

புதுடெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, நேற்று பிறந்தநாளை கொண்டாடிய அமித்ஷாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், போலாவரம் நீர்பாசன திட்டம், புதிய தலைநகர் அமைத்தல், ஆந்திர பிரிவினையின் போது ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் ஆந்திராவுக்கு தேவையான நிதி உதவி வழங்கவும் ஜெகன் மோகன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மூலக்கதை