இனி கங்குலி ‘ஆட்சி’ | அக்டோபர் 22, 2019

தினமலர்  தினமலர்
இனி கங்குலி ‘ஆட்சி’ | அக்டோபர் 22, 2019

 மும்பை:  ஐ.பி.எல்., தொடரில்(2013) வெடித்த சூதாட்டத்தை அடுத்து, பி.சி.சி.ஐ.,யை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாக குழு (சி.ஓ.ஏ.,) அமைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில், முன்னாள் கேப்டன் கங்குலி புதிய பி.சி.சி.ஐ., தலைவராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. 

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாப்தே தலைமையிலான இரு நபர் அமர்வு அளித்த உத்தரவில்,’ புதிதாக பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் பதவி ஏற்றவுடன், சி.ஓ.ஏ., குழு பதவி விலக வேண்டும். இவர்களின் பணிக்கான ஊதியத்தை பி.சி.சி.ஐ., வழங்க வேண்டும்,’ என, தெரிவித்துள்ளார். 

 

மூலக்கதை