ஜப்பானின் 126-வது பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டு விழா: கொட்டு மழையிலும் குடைபிடித்தப்படி மக்கள் ஆரவார வரவேற்பு

தினகரன்  தினகரன்
ஜப்பானின் 126வது பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டு விழா: கொட்டு மழையிலும் குடைபிடித்தப்படி மக்கள் ஆரவார வரவேற்பு

டோக்கியோ: ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126-வது பேரரசராக நரிஹித்தோ அறிவிக்கப்பட்டார். இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நரிஹித்தோவுக்கு வழிநெடுகிலும் மக்கள் கொட்டு மழையிலும் குடைபிடித்தபடி நின்று ஆரவாரம் எழுப்பினர். இளவரசர் சார்லஸ், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே, முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் பிரேசில் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ உள்பட 180 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 தலைவர்கள்  இதில் கலந்து கொண்டனர்.பின்னர் பாரம்பரிய உடை அணிந்து வந்த நரிஹித்தோவுக்கு பேரரசராக முடிசூட்டப்பட்டது. அவருக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வாழ்த்துரை வழங்கினார்.  டோக்கியோவின் இம்பீரியல் அரண்மனையில் பேரரசர் 20 அடிக்கு மேல் உயரமுள்ள தகாமிகுரா சிம்மாசனத்தில் அமர்ந்தார்.  அவரது மனைவி, அருகிலுள்ள சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். முடிசூட்டு விழாவை தொடர்ந்து பிரமாண்ட விருந்து உபசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஹிகிபிஸ் புயல் தாக்கி ஜப்பானில் 80 பேர் உயிரிழந்ததால், முடிசூட்டு விழா கொண்டாட்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் மற்றொரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை