2017-ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

தினகரன்  தினகரன்
2017ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

டெல்லி: இந்தியாவில் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்நிலையில் 2017-ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கும்பல் தாக்கி கொலை, மத சம்பந்தப்பட்ட கொலை, கட்ட பஞ்சாயத்துகளால் உத்தரவிடப்பட்ட கொலைகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களால் செய்யப்பட்ட கொலைகள் இந்த இறுதி அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. அறிக்கையில் சுற்றுச்சூழல், கொலை, கொள்ளை, சைபர் கிரைம் போன்ற குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் தேசிய குற்ற ஆவண காப்பக இயக்குனர் இஷ்குமாரின் கீழ் ஒரு குழு தரவு மறுசீரமைப்பு பயிற்சியைத் தொடங்கியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அவரின் கீழ் தான் பணியகம் கொலை என்ற பிரிவின் கீழ் திருத்தம் செய்து, மத காரணங்களுக்காக கும்பல் கொலை மற்றும் கொலைக்கான காரணங்களை  சேர்த்தது. இந்த தரவு வெளியிடப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த தரவு தயாராக இருந்தது மற்றும் முழுமையாக தொகுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது வெளியிடப்படாததற்கான காரணத்தை உயர்மட்டத்தினருக்கு மட்டுமே தெரியும் என்று தரவு சேகரிபில் பணியற்றியவர்கள் கூறி உள்ளனர்.2015-16 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கும்பல் கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து கும்பல் குறித்த தரவுகளை சேகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களைச் சமாளிப்பதில் அரசாங்கம் தனது கொள்கைகளை சிறப்பாக வகுக்க உதவும் என்பதே இத்தகைய தரவு சேகரிப்பு என்று யோசனை அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தை கடத்தல், கால்நடை கடத்தல் அல்லது வகுப்புவாத காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கும்பல் கொலை நடக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை