தெற்குச் சீன கடல் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றதால் அனிமேஷன் திரைப்படம் 3 நாடுகளில் தடை

தினகரன்  தினகரன்
தெற்குச் சீன கடல் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றதால் அனிமேஷன் திரைப்படம் 3 நாடுகளில் தடை

மணிலா : தெற்குச் சீன கடல் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றதால் அனிமேஷன் திரைப்படம் 3 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பெண் இயக்குனர் ஜில்கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் அபோமின்பிள் இந்திய மதிப்பில் ரூ.532 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள முழு நீள் அனிமேஷன் திரைப்படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெறும் வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனால் இந்த படத்தில்  தென் சீனக் கடல் தொடர்பாக ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் காட்சிக் காரணமாக மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் சீன கடல் தங்களுக்கு சொந்தமானது என்று மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய தென் சீன கடலின் பெரும் பகுதி, தனக்குரியது என்று சொந்தம் கொண்டாடும் வகையில் சீனாத் தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைப்படம் அபோமின்பிள் அனிமேஷன் படத்தில் இடம் பெற்று இருப்பதே சர்ச்சைக்கு காரணம். இதனிடையே இது குறித்து வியட்நாம் வாசிகள் கூறுகையில், \'அபோமின்பிள் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது சரியான முடிவு தான். வியட்நாம் இறையாண்மைக்கு எதிரான கருத்து இதில் இருக்கிறது. முதலில் இந்த படத்தை பார்க்க விருப்பம் கொண்டிருந்தேன். ஆனால் சீனா வெளியிட்ட தவறான வரைப்படம் இதில் பயன்படுத்தப்பட்டதை அறிந்தும், பார்க்கும் முடிவை கை விட்டுவிட்டேன்\'என்றனர்.

மூலக்கதை